சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து, தாரமங்கலம், சங்ககிரி வழியாக திருச்செங்கோடு வரை 4 வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை பணிகள் 80 சதவீதம் முடிந்து, போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில், சாலை ஒரே சீராக இல்லாததால் ஆங்காங்கே மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
