வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி இருக்கிறது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெறும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு பகுதியில் தமிழகம், இலங்கை நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக நாளை டெல்டா மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.