நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில், மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் படத்தை தடுக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது : “ஜனநாயகன் திரைப்படத்தைத் தடுப்பதற்கான தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் முயற்சி, தமிழ் கலாச்சாரத்தின் மீது நடத்தப்படும் ஒரு தாக்குதலாகும். மோடி அவர்களே, தமிழ் மக்களின் குரலை ஒடுக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றிப்பெற மாட்டீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
