Saturday, December 27, 2025

ராகுல் காந்திக்கு தண்டனை கொடுத்த காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் பயிற்சி முகாமுக்கு தாமதமாக வருகைதந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டது.

மத்திய பிரதேச மாநிலம், பச்மார்ஹியில் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. பயிற்சி முகாமுக்கு தாமதமாக வருபவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் பயிற்சிப் பிரிவின் தலைவர் சச்சின் ராவ், 10 புஸ்-அப்ஸ் தண்டனை கொடுப்பது வழக்கம்.

இந்த பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக ராகுல் காந்தி கலந்துகொண்ட நிலையில், பிகார் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு நேரடியாக வந்ததால் இரண்டு நிமிடங்கள் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராகுல் காந்தி அனைவரின் முன்னிலையில் 10 புஸ்-அப்ஸ் தண்டனையை செய்தார்.

இதுகுறித்து ம.பி. காங்கிரஸில் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது : “கட்சியில் அனைவரையும் சமமாக நடத்தும் ஜனநாயகம் உள்ளது. பாஜாகவைப் போல் எங்கள் கட்சியில் முதலாலித்துவம் கிடையாது” என்றார்.

Related News

Latest News