Saturday, December 21, 2024

கோலிக்கு நடந்ததை யாராலும் பொறுத்து கொள்ள முடியாது! ராகுல் டிராவிட் காட்டம்

T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் நடைபெற்று வருகிறது.

நடப்பு போட்டிகளில் விராட் கோலி சிறப்பான formக்கு திரும்பியதை அடுத்து ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், கோலி தங்கி உள்ள ஹோட்டல் அறையை, ரசிகர்கள் சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கோலி, இது போன்ற சந்தர்ப்பங்களில் ரசிகர்கள் உணர்ச்சிவயப்படுவதை புரிந்து கொள்ள முடிவதாகவும் ஆனால், இது போன்ற செயல்களால் தனது அறையிலேயே தான் பாதுகாப்பாக உணர முடியவில்லை என்பதை அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பதிவிட்ட கோலி, தனிமனித சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இத்தகைய செயல்பாடுகள் ஏமாற்றமளிப்பதாகவும், யாராலும் இது போன்ற விஷயங்களை பொறுத்து கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் ஊடகங்கள், ரசிகர்கள் போன்ற கிரிக்கெட் வீரர்கள் எதிர்கொள்ளும் அனைத்து அழுத்தங்களையும் தாண்டி பாதுகாப்பாக உணர வைக்கும் ஒரு இடமும் இப்போது இல்லாதது போல ஆகி விட்டது எனவும், இந்த நிகழ்வை கோலி கையாண்ட விதம் சரியே என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

Latest news