இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் பெங்களூருவில் உள்ள கன்னிங்ஹாம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் மீது ஆட்டோ ஒன்று உரசியதால், அவரின் காரில் கீறல்கள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ராகுல் டிராவிட், அந்த ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.