Thursday, May 15, 2025

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கில் கதிர் வீச்சு லீக்? சர்வதேச அணுசக்தி நிறுவனம் முக்கிய விளக்கம்!

நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் உச்சமடைந்து இந்தியாவின் ஏவுகணை தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் மற்றும் 3 விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டு துவம்சம் செய்யப்பட்டன. இந்நிலையில் தான் பாகிஸ்தானின் கிராணா மலையில் உள்ள அணுஆயுத சேமிப்பு கிடங்கில் இருந்து அணுகதிர் வீச்சு வெளியாவதாக தகவல்கள் பரவி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பதற்றத்தை ஏற்படுத்திய இச்சம்பவத்தின் பின்னணி என்ன என்பது பற்றி சர்வதேச அணுசக்தி நிறுவனம் தற்போது விளக்கம் அளித்திருக்கிறது.

முன்னதாக பாகிஸ்தான் தனது அணுஆயுதங்களை கிராணா மலையில் சுரங்கம் அமைத்து பாதுகாத்து வருவதாகவும் தற்போது அங்கிருந்து அணுக்கதிர் வீச்சு கசிகிறது என்றும் தகவல்கள் வெளியாகியதோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் தாக்குதல் தான் இதற்கு காரணம் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் காட்டுத்தீ போல பற்றிக்கொண்டு பரவின. மேலும் கிராணா மலைப்பகுதியையொட்டிய கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வீடுகள் காலியாக இருப்பது போன்ற வீடியோகள் வைரலாக பரப்பப்பட்டன.

இந்நிலையில் தான் பாகிஸ்தானின் அணுஆயுத சேமிப்பு கிடங்கில் இருந்து அணுகதிர் வீச்சு வெளியேறுகிறதா என்பது பற்றி சர்வதேச அணுசக்தி நிறுவனம் அதாவது IAEA அல்லது International Atomic Energy Agency முக்கிய விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறது. இதுபற்றி சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் Fredrick என்பவர் “சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தகவலின்படி பாகிஸ்தானின் அணுஆயுதம் சேமிக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து கதிர் வீச்சு எதுவும் இல்லை” என்று விளக்கமளித்துள்ளார்.

Latest news