Tuesday, December 23, 2025

‘மலையைப் பார்த்து நாய் குறைத்தால்’..விஜய் குறித்து ஆர்.எஸ்.பாரதி பேச்சு

சென்னை ஆலந்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்தார்.

யார் கண்காட்சி நடத்துகிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். விஜய் கட்சி ஆரம்பித்துவிட்டதால் பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் கூறினார். விஜயை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்வது கிடையாது என்று கூறிய அவர், இதைவிடப் பெரிய சவால்களை எல்லாம் எதிர்கொண்டு வெற்றிபெற்ற கட்சி திமுக என்றும் கூறினார். மலையைப் பார்த்து நாய் குறைத்தால் மலை ஒன்றும் குறைந்துவிடாது என்றும் தெரிவித்தார்.

Related News

Latest News