மதுரையில் த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு நேற்று நடந்தது. திரளான தொண்டர்கள் பங்கேற்ற மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் பேசும்போது, ‘2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. – த.வெ.க. இடையேதான் போட்டி’ என்று தெரிவித்தார்.
பா.ஜ.க.வுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதற்கு கூட்டணி வைக்க வேண்டும்?. அவர்களுடன் கூட்டணி வைக்க நம்ம என்ன மிகப்பெரிய ஊழல் கட்சியா? என பேசினார்.
இந்நிலையில் விஜய் மாநாட்டில் பேசியது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல் விஜய் தன்னை நினைத்துக்கொள்கிறார். யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம், மாநாடு நடத்தலாம். ஆனால் மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது.
அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும் தவிர்த்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது. த.வெ.க. தலைவர் விஜய் ஒன்றரை ஆண்டாக கை குழந்தையாக உள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.