ஆதார் அட்டை தற்போது தவிர்க்க முடியாத முக்கிய அடையாள ஆவணமாக மாறியுள்ளது. ஆதார் அட்டையை எளிதில் எடுத்துச் செல்லும் வசதிக்காக, பிவிசி (PVC) எனப்படும் பிளாஸ்டிக் ஆதார் அட்டையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பிவிசி ஆதார் அட்டையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நடத்தும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பெறலாம். இதுவரை பிவிசி ஆதார் அட்டைக்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி முதல் பிவிசி ஆதார் அட்டைக்கான கட்டணத்தை உயர்த்த UIDAI உத்தரவிட்டுள்ளது. இதன்படி, புதிய பிளாஸ்டிக் ஆதார் அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள் இனி 75 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தொகையில் வரி மற்றும் டெலிவரி கட்டணமும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக பிவிசி ஆதார் அட்டைக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. UIDAI இணையதளத்தில் பிவிசி ஆதாருக்கு விண்ணப்பித்தால், 5 பணிநாட்களுக்குள் விண்ணப்பதாரரின் முகவரிக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் அந்த அட்டை அனுப்பி வைக்கப்படும்.
