Saturday, May 31, 2025

”உங்க ஈகோவை தூக்கி போடுங்க” ஷ்ரேயாஸை ‘விளாசிய’ முன்னாள் வீரர்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Qualifier 1 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி பரிதாபமாக தோல்வியைத் தழுவி அதிர்ச்சி அளித்துள்ளது. 19 பாயிண்டுகளுடன் பாயிண்ட் டேபிளில் முதல் இடத்தில் இருந்த பஞ்சாப், பெங்களூருக்கு எதிராக 101 ரன்களுக்கு சுருண்டு ஷாக் கொடுத்துள்ளது.

தோல்விக்கு பிறகு, ” நாங்கள் ஆட்டத்தில் தான் தோற்றோம். போரில் அல்ல” என்று, கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேசியிருந்தார். Qualifier 2 போட்டியில் மும்பையை வீழ்த்தினால், பஞ்சாப்புக்கு இறுதிப்போட்டியில் விளையாட இன்னுமொரு வாய்ப்பு கிடைக்கும்.

இந்தநிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் Tom Moody, கேப்டன் ஷ்ரேயாஸை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர், ”T20யில் Josh Hazelwoodக்கு எதிராக, இதற்குமுன் 4 முறை ஷ்ரேயாஸ் ஆட்டமிழந்துள்ளார். இதனால் அவரின் பந்துகளை எப்படியாவது சமாளித்து விட்டு, மற்ற பவுலர்களை அதிரடியாக எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப் பட்டது.

ஆனால் தன்னுடைய ஈகோவால் ஷ்ரேயாஸ், Hazelwood பந்திலேயே வீழ்ந்து விட்டார். சில நேரங்களில் உங்களுடைய ஈகோவை பாக்கெட்டில் போட்டு விட்டு, நீங்கள் முன்னோக்கி செல்ல வேண்டும். இதற்கு ஸ்ரேயாஸ் போட்டி சூழ்நிலையை சரியாக படிக்காதது, சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

தனது முந்தைய தவறுகளில் இருந்து ஷ்ரேயாஸ் பாடம் படிக்கவில்லை. Hazelwood வீசிய 3வது பந்திலேயே விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறி விட்டார். இதுவே பஞ்சாப் அணி நேரடியாக பைனலுக்கு செல்லும் வாய்ப்பை இழப்பதற்கு முக்கியக் காரணம், ” இவ்வாறு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news