இஸ்ரேல் உடனான போரில் ஈரான் சரணடைய வேண்டும். இல்லையெனில் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது சமூக ஊடகப் பதிவில், “ஆயுதங்களை கீழே போடுங்கள், இல்லையெனில் மரணத்தை எதிர்கொள்ளுங்கள். ஈரானின் அச்சுறுத்தலை முற்றிலும் ஒழிப்போம். அவர்களின் ஏவுகணை திறன்களைத் தரைமட்டமாக்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது முக்கியமான தாக்குதலை தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரானால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்கர்களை பாதுகாப்பதே தங்களின் நோக்கம் எனவும் கூறியுள்ளார். ஈரானின் செயல்பாடுகள் அமெரிக்கா மற்றும் அயல்நாடுகளில் உள்ள ராணுவத் தளங்களுக்கும், உலக நாடுகளின் பாதுகாப்பிற்கும் ஆபத்தாக உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
