இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1800 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
இந்நிலையில் ‘புஷ்பா 2: தி ரூல்’ வசூல் குறித்து வழக்கறிஞர் நரசிம்மராவ் இந்த பொதுநல வழக்கை (PIL) தாக்கல் செய்துள்ளார்.
பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸில் தெலுங்கு மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் ஸ்ட்ரீமிங் ஆகிறது. ‘புஷ்பா 2: தி ரூல்’ மூலம் கிடைக்கும் லாபத்தை சிறிய படங்களுக்கு பட்ஜெட் மானியமாக பயன்படுத்தவும், நாட்டுப்புற கலைஞர்களின் ஓய்வூதியத்திற்காக ஒதுக்க வேண்டும் என்றும் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.