மகாராஷ்டிரா மாநிலம், புனேவின் ஜுன்னாரைச் சேர்ந்த கணேஷ் சங்கடே என்கிற நபர், தனது மஹிந்திரா தார் காரின் குறைபாடுகள் நீண்ட நாட்களாக சரிசெய்யப்படாததால், அவர் கடைசியில் இரண்டு கழுதைகளால் காரை இழுத்து ஷோரூமின் முன் நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தார்.
இது குறித்து அந்த நபர் கூறியதாவது : புதிதாக வாங்கிய தார் காரில் பல தொழில்நுட்ப சிக்கல்கள் தொடர்ந்து ஏற்பட்டன. பலமுறை ஷோரூமில் புகார் அளித்தும் பிரச்சனை சரியாய் தீர்க்கப்படவில்லை என கூறினார். இதனால் விரக்தியடைந்த அவர் இரண்டு கழுதைகளை பயன்படுத்தி காரை ஷோரூமுக்கு இழுத்து சென்றார்.
இந்த நிகழ்வை மக்கள் தங்கள் மொபைல் போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அந்த வீடியோ தற்போது மிக விரைவாக வைரலாகி வருகிறது.
