தவெக தலைவர் விஜய் தனது நண்பர் எனவும், கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும் எனவும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். ரங்கசாமியின் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், நிகழ்ச்சிக்கு பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தமிழகத்தில் போட்டியிட உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பலரும் என்.ஆர்.காங்கிரஸில் சேர விருப்பம் தெரிவித்து வருவதாக தெரிவித்தார்.
இதனிடையே, தவெக தலைவர் விஜயுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு, விஜய் தனது நண்பர் எனவும், கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும் எனவும் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.