தூய்மைப் பணியாளர்கள் பற்றி Youtuber சவுக்கு சங்கர் பேசிய விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், நேற்று அவரது இல்லத்தில் சில அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில் ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமான், ஆர்.எஸ்.புரம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தூய்மைப் பணியாளர்களை குடிகாரர்களைப் போல் சித்தரித்து பேசிய சவுக்கு சங்கரை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்தார். Youtuber என்றால் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம் என்கின்ற தொனி ஏற்புடையது அல்ல என்று தெரிவித்த அவர், சவுக்கு சங்கரை எதிர்த்து போராட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.