வெள்ள நிவாரணம் வழங்காததை கண்டித்து, விழுப்புரத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால், கோட்டகுப்பம் பகுதியில் மழைநீர் புகுந்ததால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
இந்த நிலையில், வெள்ள நிவாரணம் வழங்காததை கண்டித்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் இருபக்கமும், இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனையடுத்து விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என வருவாய் அதிகாரிகள் தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.