தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்து நாளை(ஜன.7) போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க., அறிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துகொண்டார். அப்போது தேசிய கீதத்தை முதலில் பாடாமல் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டதால் அதிருப்தி அடைந்த அவர் சட்டசபையை விட்டு வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆளுநரின் இந்த செயலை கண்டித்து பல்வேறு தரப்பினர் கண்டனத்தை பதிவு செய்தனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்து நாளை(ஜன.7) போராட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.