விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி வெளியான திரைப்படம் கிங்டம். இப்படம் தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளில் டப்பிங் ஆகி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதை இலங்கையில் நடைபெறுவது போன்று உள்ளது.
இந்நிலையில் இலங்கை தமிழர்களை குற்றப்பரம்பரை போல் இந்த படம் சித்தரிப்பதாகவும், அங்குள்ள மலையகத் தமிழர்களை இலங்கை தமிழர்கள் ஒடுக்கினார்கள் என்பது போன்று காட்சிகள் இருப்பதாக கூறி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் ‛கிங்டம்’ படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த அந்த படத்தின் போஸ்டர், பேனர்களை கிழித்தனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.