மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்

தெலங்கானா மாநிலம் மின்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று காலை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.2,18 கோடி ரொக்கத்தையும் பறிதல் செய்தனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் மின்துறை உதவி கோட்டப் பொறியாளராக பணியாற்றி வரும் அம்பேத்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பெயரில் அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு தொடர்புடைய 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

அம்பேத்கர் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி சொத்துக்களை வாங்கியிருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News

Latest News