Thursday, May 8, 2025

நடிகராக இருக்க தகுதியே இல்லை…நடிகர் யோகி பாபுவை விமர்சித்த தயாரிப்பாளர்

நடிகர் யோகி பாபு ஆரம்பத்தில் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பிறகு வெள்ளித்திரையில் காமெடியனாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் கஜானா திரைப்படத்தின் ப்ரோமோஷனில் யோகி பாபு கலந்து கொள்ளவில்லை என்று அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா மேடையில் கடுமையாக பேசி இருக்கிறார்.

ஒரு நடிகனுக்கு தான் நடித்த திரைப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு இல்லை என்றால் நீ நடிகனாக இருக்க லாய்க்கு இல்ல என பேசியுள்ளார். தயாரிப்பாளர் ராஜாவின் பேச்சு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest news