ஆம்பூர் அருகே தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 3 குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து 28 பயணிகளுடன் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கியது.
சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்து மண்குவியல் மீது மோதி கவிழ்ந்தது. இதில் 3 குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஆம்பூர் கிராமிய போலீசார் கிரேன் மூலம் பேருந்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர்.