முன்னாள் கூகுள் பொறியாளரும், தொழில்நுட்பத்தில் தனிமனித பாதுகாப்பை ஆராய்ச்சி செய்பவருமான Felix Krause மெட்டா நிறுவனத்தின் சமூகவலைத்தளங்களான Facebook மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களின் இணையதள செயல்பாட்டை உளவுபார்த்து வருவதை கண்டுபிடித்துள்ளார்.
Code Injection முறையை பயன்படுத்தி, இந்த appகளில் in-app browserகள் மூலம் தேடப்படும் அனைத்து விவரங்களையும் மெட்டா நிறுவனம் சேகரித்து வருவது உறுதியாகியுள்ளது.
In-app browserகள் வழியாக மற்ற தளங்களை login செய்யும் passwordகள், வங்கி எண் விவரங்களும் இதில் அடக்கம்.
சுயவிவரங்கள் உளவுபார்க்கப்படுவதை தடுக்க In-app browserஐ பயன்படுத்துவதை தவிர்க்கவும், Facebook மற்றும் இன்ஸ்டாகிராமை app டவுன்லோட் செய்வதற்கு பதிலாக இணையத்தில் உபயோகிப்பதால் மேம்பட்ட பாதுகாப்பை பெற முடியும் என சைபர் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.