Monday, December 8, 2025

சிறையில் கைதியுடன் தகாத உறவு., வசமாக சிக்கிய பெண் அதிகாரி

இங்கிலாந்தின் வெதர்பி நகரில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இந்த சிறைச்சாலையில் சுமார் 200 தண்டனை கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் அதிகாரியாக இருந்தவர் மேகன் கிப்சன். இவர் சிறையில் இருந்த ஒரு கைதியுடன் தகாத உறவில் இருந்ததாக சக ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்ட புகார்களை அனுப்பினர்.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த கைதிக்கு சிறையில் போதைப்பொருள் சப்ளை செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குற்றச்சாட்டு உறுதியானதால் மேகனுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

Related News

Latest News