பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்டு, எம்.ஜி. சாலை பாளையம் தியாகிகள் நினைவிட சந்திப்பிலிருந்து திருவனந்தபுரம் கிழக்கு கோட்டை வரை ரோடு-ஷோ நடத்தினார். இந்த ரோடு-ஷோவில் சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக அவரை வரவேற்றனர்.
இதையடுத்து திருவனந்தபுரம் கிழக்கு கோட்டையில் அமைந்துள்ள புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெற்ற ரயில்வே விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த விழாவில் நாகர்கோவில்–மங்களூரு, திருவனந்தபுரம்–தாம்பரம், திருவனந்தபுரம்–ஐதராபாத் ஆகிய மூன்று வழித்தடங்களில் இயக்கப்பட உள்ள அம்ரித் பாரத் ரெயில்களையும், குருவாயூர்–திருச்சூர் இடையேயான ஒரு பயணிகள் ரயில் சேவையையும் உட்பட மொத்தம் நான்கு புதிய ரெயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
