Sunday, December 28, 2025

இறந்தது போல் நடித்து தனக்கு தானே இறுதிச்சடங்கு நடத்திய நபர்

பீகார் மாநிலம் கயாவை சேர்ந்தவர் 74 வயதான முன்னாள் விமானப்படை வீரர் மோகன் லால். இவரது மனைவி 14 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில், தான் மரணமடைந்தால் இந்த ஊரில் யார் எல்லாம் தன்னுடைய இறுதிச்சடங்கிற்கு வருவார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக இறந்தது போல நடித்து தனக்குத்தானே இறுதிச்சடங்கு செய்துள்ளார்.

இறுதிச்சடங்கு நடைபெற்ற போது, எழுந்து உட்கார்ந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இறந்தது போல் நடித்து தனக்கு தானே இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

Related News

Latest News