கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே மோதல் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சண்டை நிறுத்தம் அமலாகியுள்ளது. ஆனால் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் மோதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது : ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனையை தீர்ப்பது எனக்கு எளிது. இந்தியா-பாகிஸ்தான் மோதல் உட்பட 8 உலகளாவிய போர்களை தீர்த்துவிட்டேன்.
நான் ஒவ்வொரு முறையும் ஒரு பிரச்னையைத் தீர்க்கும்போது, உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்கும்’ என்று சொல்கிறார்கள். ஆனால், எனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. இருந்தாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு உயிர்களைக் காப்பாற்றுவதுதான் முக்கியம்” என்றார்.
