Monday, January 20, 2025

‘லவ் டுடே’ இயக்குநருக்கு 8 வருடத்திற்கு பிறகு ரிப்ளை செய்த பிரபலம்!

‘கோமாளி’ படத்திற்கு கிடைத்த கணிசமான அங்கீகாரத்தை அடுத்து ‘லவ் டுடே’ படத்தில் அமோக வரவேற்பை பெற்றுள்ள பிரதீப் ரங்கநாதனுக்கு, திரை பிரபலங்களிடம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும், இந்த படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும் தனக்கான இடத்தை ஏற்படுத்தி கொண்டார் பிரதீப். 

இந்நிலையில், எட்டு வருடங்களுக்கு முன் தன்னை tag செய்து பிரதீப் பதிவிட்ட ட்வீட்டுக்கு, நடிகரும் பாடகருமான பிரேம்ஜி தற்போது பதிலளித்து இருப்பது சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

தன்னுடைய குறும்படத்துக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்ட பிரதீப்பின் ட்வீட்டை மேற்கோள் காட்டி, தங்களது அடுத்த படத்தில் எனக்கு வாய்ப்பளியுங்கள் என்று பிரேம்ஜி பதிவிட்டுள்ளது ஒரே ட்வீட்டில் பிரதீப்பின் அசாத்திய வளர்ச்சியை சுட்டிக்காட்டுவது போலவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news