Saturday, August 30, 2025
HTML tutorial

50 வயதில் அப்பாவான பிரபு தேவா! சுந்தரம் மாஸ்டர் குடும்பத்தில் முதல் பெண் குழந்தை….

அசாத்தியமான நடனத்திறமையால் கோலிவுட்டின் மைக்கேல் ஜாக்சன் என பாராட்டப்படும் பிரபு தேவாவின் காதல் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை.

ரமலத் எனும் டான்சருடன் நடந்த முதல் திருமணத்தின் மூலம் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தனர். மூத்த மகன் கேன்சரில் உயிரிழந்தது மற்றும் நயன்தாராவுடன் காதல் விவகாரம் காரணமாக 2011ஆம் ஆண்டு இவர்களுக்கு விவாகரத்து நடந்தது.

2012ஆம் ஆண்டு நயன்தாராவுடனான காதலும் முடிவுக்கு வந்த நிலையில் 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது physiotherapist ஆன ஹிமானியை பிரபுதேவா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் அவரது பிறந்தநாளையொட்டி ஹிமானியுடன் திருப்பதி சென்றிருந்தார் பிரபுதேவா.

இந்நிலையில் பிரபுதேவா – ஹிமானி தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபுதேவாவின் சகோதரர்களான ராஜூ சுந்தரம் மற்றும் நாகேந்திரப் பிரசாத் ஆகிய இருவருக்கும் ஆண் குழந்தைகளே உள்ள நிலையில், இதுவே சுந்தரம் மாஸ்டர் குடும்பத்தில் பிறந்துள்ள முதல் பெண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News