ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை..!

ரஷ்யாவின் கம்சட்கா கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தில் இருந்து 128 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் வெள்ளிக்கிழமை காலை 12.28 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவாகியுள்ளது. கடற்கரையில் 30 முதல் 62 சென்டிமீட்டர் உயர ராட்சத அலை உருவாகக்கூடும் என்பதால் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related News

Latest News