தற்போதைய கடும் வெயில் காலத்தில், மிகுந்த வெப்பத்தை தவிர்க்க பலரும் தங்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் ஏர் கண்டிஷனர்கள் (AC) பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், AC பயன்படுத்தும்போது அதனால் ஏற்படும் மின்சார செலவு மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியமாகும்.
ஒரு மணி நேரத்திற்கு 1 டன் AC பயன்படுத்தினால், சராசரியாக 1 யூனிட் மின்சாரம் செலவாகும். இதேபோல், 1.5 டன் AC பயன்படுத்தினால், அதற்கேற்ப 1.5 யூனிட் மின்சாரம் தேவைப்படும். இதன் அடிப்படையில், ஒருவர் தினமும் 8 மணி நேரம் 1.5 டன் AC பயன்படுத்துவதாக வைத்துக் கொண்டால், ஒரு மாதத்திற்கு சுமார் 360 யூனிட்கள் மின்சாரம் செலவாகும். இதற்கேற்ப மின் கட்டணமும் பெருகும்.
அதிக அளவில் மின்சாரம் பயன்படுத்துவதால், உடல்நலத்துக்கும் பாதிப்புகள் ஏற்படும் என்று சில ஆராய்ச்சிகள் எச்சரிக்கின்றன. எனவே, AC பயன்படுத்தும் அனைவரும், அதன் மின்சார பயன்பாடு மற்றும் செலவினத்தை புரிந்துகொண்டு, முறையாக பயன்படுத்துவது அவசியம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.