Saturday, December 27, 2025

தமிழகத்தில் நாளை (06.11.2025) மின் தடை!! மாவட்ட வாரியாக முழு விவரங்கள் இதோ!!

தமிழ்நாட்டில் நாளை (06.11.2025) வியாழக்கிழமை அன்று பல பகுதிகளில் வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. ஆகையால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் நாளை பகல் நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது மின்சார வாரியம். அதன்படி, நாளைய மின் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் மாவட்ட வாரியாக தற்போது பார்க்கலாம்.

கோவை

செங்கத்துறை, ஏரோநகர், பி. என். பி. நகர், காடம்பாடி, காங்கேயம்பாளையம், மதியழகன் நகர் ஆகிய இடங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம்

மேட்டூர் பகுதியில் படைவீடு, பச்சம்பாளையம், சங்கரி ஆர்.எஸ்., சங்கரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, உஞ்சக்கொரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னகவுடனூர், வெப்படை, சோவத்தபுரம், பாதரை, அம்மன்கோவில், மகிரிபாளையம் ஆகிய இடங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர், பசும்பலூர், முறுக்கன்குடி, வி.களத்தூர், பரவை, கிளுமாத்தூர், ஓலைப்பாடி, எழுமோர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது..

திருநெல்வேலி

காரையாறு, சோ்வலாறு, பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையக்கருங்குளம், ஆறுமுகம்பட்டி, கோட்டைவிளைபட்டி, ஆழ்வாா்குறிச்சி, கருத்தப்பிள்ளையூா், ஏ.பி.நாடானூா், துப்பாக்குடி, கலிதீா்த்தான்பட்டி, பொட்டல்புதூா், ஆம்பூா், பாப்பான்குளம், சம்பன்குளம், செல்லப் பிள்ளையாா்குளம் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News