சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. இதைத்தொடர்ந்து அவர், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ந் தேதி அவருக்கு ஜாமீன் கிடைத்தது. செப்டம்பர் 29-ந் தேதி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றார். அமைச்சர் பதவி குறித்து உச்சநீதிமன்றம் கொடுத்த நெருக்கடி காரணமாக கடந்த 2 தினங்களுக்கு முன்னர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் ‘படையப்பா’ பட ஸ்டைலில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுகவினர் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் நான் யானை அல்ல… குதிரை.. டக்குனு எழுவேன்…என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.