விலைவாசி உயர்வு நிலவும் இக்காலத்தில், பாதுகாப்பான சேமிப்புக்கு கிசான் விகாஸ் பத்ரா திட்டம் சிறந்த விருப்பம். இது மத்திய அரசு உத்தரவாதம் கொண்ட போஸ்ட் ஆபிஸ் சேமிப்புத் திட்டமாகும். இதில் முதலீடு 115 மாதங்கள் (9 ஆண்டுகள் 7 மாதங்கள்)ல் இரட்டிப்பாகும்.
திட்ட விவரங்கள்
- வட்டி: 7.5% கூட்டு வட்டி; 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் உண்டு.
- முதலீடு: குறைந்தபட்சம் ரூ.1,000; அதிகபட்சம் இல்லை.
- பாதுகாப்பு: மத்திய அரசு உத்தரவாதம், சந்தை ஏற்ற இறக்கம் இன்றி.
யார் சேரலாம்
யார் வேண்டுமானாலும்; வயது வரம்பு இல்லை. ஒற்றை/ஜாயிண்ட் (மேலும் 3 பேர்) கணக்கு திறக்கலாம். ஆதார், வயது சான்று, போட்டோ, விண்ணப்பம் தேவை.
எப்படி இரட்டிப்பாகும்
ரூ.1 லட்சம் முதலீட்டிற்கு:
- 1ஆம் ஆண்டு: ரூ.7,500 வட்டி.
- 2ஆம் ஆண்டு: ரூ.8,062 வட்டி.
- 115 மாதங்களில்: ரூ.2 லட்சம். ரூ.5 லட்சம் போட்டால் ரூ.10 லட்சம் பெறலாம்.
