Thursday, December 25, 2025

போரூர் சிறுமி பலாத்கார வழக்கு: கடந்து வந்த பாதை..

போரூர் சிறுமி பாலியல் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி தஷ்வந்த் எதனடிப்படையில் விடுவிக்கப்பட்டார் என்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின் சுருக்கத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிறுமி ஹாசினி கொலை வழக்கை முதலில் விசாரித்த புலனாய்வு அதிகாரி ரவிக்குமார் என்பவரிடமிருந்து ஆர்.டி.விவேகானந்தன் என்ற அதிகாரி ஏப்ரல் 22.2017ல் வழக்கை ஏற்றுக் கொண்டார், அவர் அளித்த சாட்சியத்தில் ஹாசினி மாயமான பின்பு அது தொடர்பாக
அருகில் விளையாடிக் கொண்டிருந்த பிற குழந்தைகளிடம் எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை.

அதாவது, குற்றம் சாட்டப்பட்ட நபரின் விந்து மற்றும் ரத்த மாதிரிகளை அவரின் விருப்பத்திற்கு மாறாகவும் அவரை துன்புறுத்தி சேகரித்ததாகவும் கூறுவது தவறு. அதேபோல் தஷ்வந்த் பயன்படுத்திய அலைபேசி எண் வந்த அழைப்பு விவரப் பதிவுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

குற்றம் சாட்டப்பட்ட நபரை கண்டறியும் வண்ணம் எந்த ஒரு அடையாள அணிவகுப்பம் நடத்தப்படவில்லை. குற்ற சம்பவம் அரங்கேறிய பிப்ரவரி 5ஆம் தேதி முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரை குற்றச்சாட்டப்பட்ட நபரான தஷ்வந்த் தன்னுடைய அலுவலகத்திற்கு சென்றாரா என்பது தொடர்பான விசாரணை நடத்தப்படவில்லை.

அதேபோல இரண்டாவது புலனாய்வு அதிகாரி ரவிச்சந்திரன் மேற்கொண்ட விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட நபர் சம்பந்தப்பட்ட நாளில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் நாயுடன் விளையாடியதாக ஒருவருர் சாட்சி அளித்துள்ளார்.

அதேபோல மற்றொரு சாட்சியான புஷ்பா என்பவர் குற்றம் சாட்டப்பட்ட தஷ்வந்த் இரவு 7 மணி அளவில் கையில் ஒரு பேடன் தனது இருசக்கர வாகனத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறியதாகவும் முதல்முறையாக சாட்சியம் அளித்துள்ளார்.

ஆனால், இந்த சாட்சிகளை நம்புவது என்பது கடினமாக உள்ளது. ஏனெனில் குற்றச்சாட்டப்பட்ட தஷ்வந்துக்கு எதிராக ஆதாரத்தை உருவாக்கும் நோக்கிலேயே இந்த சாட்சிகளின் வாக்குமூலம் உள்ளது.

இந்த இரு சாட்சிகளும் கூறும் இந்த முக்கிய விஷயத்தின் உண்மைத்தன்மை கேள்விக்குரியதாகிறது, ஏனெனில் இந்த கூற்றில் சற்றே உண்மை இருந்திருந்தால் அவர்கள் முதன் முறையாக வழக்கை விசாரித்த அதிகாரியான ரவிக்குமாரிடம் இந்த விசயத்தை தெரிவித்திருப்பார்கள். எனவே இந்த சாட்சிகளின் கருத்து ஆதாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது என்று கருதுகிறோம்.

மேலும் ஜூன் 6 2017 அன்று நீதிமன்ற உத்தரவுடன் குற்றம் சாட்டப்பட்ட தஷ்வந்தின் ரத்த மாதிரி சேகரிப்பதற்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆஜர் படுத்தப்பட்டார் எனவும் மரபணு பரிசோதனைக்காக அவரின் ரத்த மாதிரிகள் சென்னை FSSL அனுப்பப்பட்டதாக புலனாய்வு அதிகாரி கூறினார்.

ஆனால் மரபணு சோதனைக்காக ரத்த மாதிரிகளை சேகரித்து சென்னை FSSL -க்கு அனுப்பியதற்கான எந்த ஒரு ஆவணத்தையோ குறிப்பானையையோ காண முடியவில்லை.

இதன் மூலம் ரத்த மாதிரியை DNA பரிசோதனைக்கு அனுப்பும் நடைமுறை மீறப்பட்டுள்ளது. அதன் புனித தன்மையும் கேள்விக்கு உள்ளாகிறது அதன் அடிப்படையில்DNA அறிக்கை என்பது இந்த நேரத்தில் செல்லாததாகி விடுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட நபரின் ரத்த மாதிரியுடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் உள்ளாடைகளில் இருந்து எடுக்கப்பட்ட விந்தணுவின் மாதிரியும் DNA பரிசோதனை மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டதில் இரண்டும் ஒத்துப்போவதாக நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

ஆனால் மீட்டெடுக்கப்பட்ட உள்ளாடை பாதிக்கப்பட்ட நபருடையதா? என்பது தொடர்பான உண்மை தன்மை முறையாக நிரூபிக்கப்படவில்லை, அந்த உள்ளடையின் உண்மை தன்மையை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க காவல்துறை தவறிவிட்டது, அதனால் DNA பகுப்பாய்வு முடிவுகளை இங்கு ஏற்க முடியாது.

அதேபோல விந்தணுவை பகுப்பாய்வு நடத்திய நிபுணர் அளித்த சாட்சியம் மேலும் இந்த விவகாரத்தில் சந்தேகத்தை எழுப்பி உள்ளது,

ஏனெனில் மனித உடலில் இருந்து வெளியேறிய பின்னர் விந்தணு உயிரணுக்கள் எத்தனை காலம் உயிர் வாழும் என்று கேட்கப்பட்டதற்கு 48 மணி நேரம் வரையே உயிர் வாழும் என அவர் தெரிவித்திருக்கிறார், அதே வேளையில் விந்தணு கறையில் உள்ள செல்களில் இருந்து டி என் ஏ பரிசோதனைக்காக உயிரணுக்கள் பிரிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நேரம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் குற்றம் சாட்டப்பட்டவரின் ரத்த மாதிரிகளை பிப்ரவரி 8ஆம் தேதி 2017ல் சேகரித்திருக்கிறார்கள், அப்படியெனில் 4 மாத காலங்கள் புலனாய்வு நிறுவனம் எதற்காக காத்திருந்தது? என்பதற்கான எந்த ஒரு காரணமும் தெரிவிக்கப்படவில்லை,

எனவே இந்தக் காலதாமதம் என்பது மாதிரிகளை manipulate செய்வதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆகையால், பாதிக்கப்பட்ட நபரின் உள்ளாடையிலிருந்து எடுக்கப்பட்ட பிந்து கறையில் இருந்து பிரிக்கப்பட்ட DNA குற்றம்சாட்டப்பட்ட நபரின் ரத்த மாதிரி DNA பகுப்பாய்வு செய்யப்பட்ட நடைமுறை அனைத்தும் கடுமையான சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் ஏழு வயது சிறுமிக்கு எதிராக கொடூரமான குற்றம் நடைபெற்றுள்ளது அதை மறுக்க முடியாது. அதே வேளையில், குற்றம் சாட்டப்பட்ட நபரின் மீதான குற்றத்தை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க வேண்டியது அரசு தரப்பின் கடமை என்ற குற்றவியல் நீதித்துறையில் கொள்கையை புறக்கணிக்க முடியாது

இந்த வழக்கானது சூழ்நிலை மற்றும் ஆதாரங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு வழக்காகும் இதில் குற்றத்தை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அரசு பரப்புக்கானதாகும் அந்த வகையில் இந்த விவகாரத்தில் துரதிர்ஷ்டவசமாக அரசு தரப்பு குற்றத்தை நிரூபிக்க தவறிவிட்டது தோல்வி அடைந்து விட்டது.

கொடூர குற்றமாக இருந்த போதிலும் இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபரை விடுவிப்பதை தவிர வேறு வழி இல்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது கொடூர குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரை விடுவிப்பது சமூகம் மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு வேதனையை ஏற்படுத்தும் என்பதை ஒப்புக் கொள்கிறோம் ஆனால் சட்ட நடைமுறையின் படி குற்றச்சாட்டப்பட்ட நபரை தார்மீக நம்பிக்கை அல்லது யூகங்களின் அடிப்படையிலோ, பொதுமக்களின் உணர்வுகள் மற்றும் பிற அழுத்தங்களின் அடிப்படையில் தண்டிக்க நீதிமன்றங்களால் முடியாது, அதை நீதிமன்றம் அனுமதிக்காது.

மேற்கூறிய விஷயங்களை பகுப்பாய்வு செய்ததில் இந்த வழக்கில் முக்கியமான ஆதாரமாக உள்ள சிசிடிவி கேமரா பதிவில் உள்ள குற்றம் சாட்டப்பட்ட நபரின் நடத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட நபரின் ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில்தான் குற்றச்சாட்டக் கூடிய பல்வேறு விவகாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன

அதேபோல் DNA பகுப்பாய்வு அடிப்படையில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. அந்த வகையில் விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் விசாரணையில் பல்வேறு குறைபாடுகளும், loop holes இருப்பதை கண்டறிய முடிந்தது

எனவே சூழ்நிலை மற்றும் அனைத்து வகையான சந்தேகங்களுக்கும் அப்பால் இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. எனவே குற்றச்சாட்டப்பட்ட நபருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News