வாடிகனில் மறைந்த போப் பிரான்சிஸ் (88) இறுதிச்சடங்கில் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்த பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்களும் பங்கேற்றுள்ளனர். சனிக்கிழமை மதியம் 1.30 மணியளவில், போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்குகள் தொடங்கின.
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு வாடிகன் நகரில் தொடங்கியது. அவரது உடலுக்கு பாரம்பரிய முறைப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது.
இறுதி சடங்கு முடிந்த பிறகு அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது.