உக்ரைன் கொடியை முத்தமிட்டு, ‘புச்சா படுகொலை’க்கு  கண்டனம் தெரிவித்துள்ளார் போப் பிரான்சிஸ்.

427
Advertisement

ஒட்டு மொத்த  உலக நாடுகளை  கடந்த ஒரு மாதங்களுக்கு மேல் கவலையடையச்செய்துள்ள ஒரே செய்தி உக்ரைன் மீதான தாக்குதல்.உக்ரைன் மீதான ரஷ்ய படை தாக்குதல் ஓய்யாத நிலையில் , மற்றொரு புறம் போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை தொடர்கிறது.

இதற்கிடையில் , வயதுவித்யாசமின்றி  மனித உயிர்கள் காற்றோடு கலந்துவருகிறது. போர் முடிவுக்கு வரவேண்டும் என்பது தான் தற்போது உலக மக்களின் எண்ணமாக உள்ளது.

இந்நிலையில் ,

வாடிகன் அரங்கில் வாராந்திர கூட்டத்தில்  கலந்துகொண்ட போப் பிரான்சிஸ், உக்ரைன்  நகரத்திலிருந்து அனுப்பப்பட்ட உக்ரேனியக் கொடியை முத்தமிட்டார்.

அப்போது புச்சா படுகொலையை கண்டித்து பேசிய பாப்,  “உக்ரைனில் நடந்த போரின் சமீபத்திய செய்திகள், நிவாரணம் மற்றும் நம்பிக்கையைத் தருவதற்குப் பதிலாக, புச்சா படுகொலை போன்ற புதிய அட்டூழியங்களைக் கொண்டு வந்துள்ளன,

“இந்தப் போரை நிறுத்துங்கள் ! ஆயுதங்கள் மௌனமாக இருக்கட்டும்! மரணத்தையும் அழிவையும் விதைப்பதை நிறுத்துங்கள்” என்று , பொதுமக்கள், பாதுகாப்பற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமையை கண்டித்தார்.

“இந்த கொடி தியாகி நகரமான புச்சாவில் இருந்து வருகிறது,” என்று அவர் அதை முத்தமிட்டு, உக்ரைனில் இருந்து வந்த போர் அகதிகள் குழந்தைகள் சந்தித்தார்.தொடர்ந்து பேசிய அவர்   “பாதுகாப்பான நிலத்திற்கு வருவதற்கு இந்தக் குழந்தைகள் ஓடிப்போக வேண்டியதாயிற்று. உக்ரேனிய மக்களை மறந்து விடக்கூடாது” என்று ஒவ்வொரு குழந்தைக்கும் சாக்லேட் ஈஸ்டர் முட்டையை வழங்கினார் போப்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தைப் பற்றி தனது பார்வையாளர்களின் முந்தைய பகுதியில் பேசிய போப் பிரான்சிஸ் , “உக்ரைனில் நடந்த போரில், ஐக்கிய நாடுகள் சபையின் இயலாமையை நாங்கள் காண்கிறோம்” என  குறிப்பிட்டு பேசினார்.

போப் சமீபத்திய ஓர் பயணத்தின் பொது, உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை மறைமுகமாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.