சென்னையில் பூந்தமல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர்அனுமதி அளித்துள்ளார்.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரியின் 4 நாட்கள் ஆய்வை தொடர்ந்து மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி வழங்கி உள்ளார்.
ஏற்கனவே இந்த வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து விரைவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
