கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் குறித்தும் சைவம் வைணவம் குறித்தும் ஆபாசமாக பேசியதால் பொன்முடி மீது கடும் கண்டனம் எழுந்தது. பொன்முடியின் பேச்சுக்கு கண்டனம் எழுந்த நிலையில் திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் திமுக துணை பொதுச்செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடியை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தற்போது திமுக வில் துணை பொதுச்செயலாளராக 7 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
