கடந்த ஆண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. இம்முறை ரொக்கமும் வழங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசு ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு பரிசுத் தொகுப்புடன் 3,000 ரூபாய் ரொக்கமும் வழங்க திமுக அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர்.
அதற்கான டோக்கன் விநியோகம் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. வீடு வீடாக சென்று டோக்கன் வழங்குவதற்கு ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் நேரடியாக ரேஷன் கடைக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
ஜனவரி 10ஆம் தேதிக்குள் பெரும்பாலான ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பும், ரொக்கமும் சென்றடையும் வகையில் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
