திமுக, அதிமுக என இரு கட்சிகளிலும் மாறி மாறி எம்.எல்.ஏ-வாக செயல்பட்ட கருப்பசாமி பாண்டியன் நெல்லையில் காலமானார். அவருக்கு வயது 76.
எம்.ஜி.ஆர் காலத்தில் அதிமுகவில் இருந்து 1977, 1980 தேர்தல்களில் சட்டப்பேரவைக்கு தேர்வான கருப்பசாமி பாண்டியன், 2000-ம் ஆண்டில் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் திமுகவில் இணைந்து, 2006 தேர்தலில் தென்காசி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வானார்.
திமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனைகள் காரணமாக 2015ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு, ஜெயலலிதாவை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைத்து கொண்டார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் 2018ஆம் ஆண்டில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைத்துக் கொண்டார் கருப்பசாமி பாண்டியன்.
2020ஆம் ஆண்டில், அதிமுகவில் மீண்டும் சேர்ந்து, கட்சியின் பொறுப்பாளர்களுடன் பணியாற்றினார். அதிமுக அமைப்பு செயலாளராக இருந்து வந்த கருப்பசாமி பாண்டியன் உயிர், தூக்கத்திலேயே பிரிந்தது.