Wednesday, October 1, 2025

ஆதவ் அர்ஜுனாவுக்கு காவல்துறை சம்மன்!!

கடந்த 27-ந் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்யும் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம், தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியது. இது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், தவெக பரப்புரை பேருந்து கேமராவில் பதிவான காட்சிகளை ஒப்படைக்கக கோரி ஆதவ் அர்ஜுனாவுக்கு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதே சமயத்தில் , தவெக துணைப் பொதுச் செயலர் நிர்மல் குமாருக்கும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பரப்புரை தொடர்பான காட்சிகளை ஒப்படைக்க கோரி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News