Tuesday, July 15, 2025

தவெக தலைவா் விஜய் மீது போலீசார் வழக்கு பதிவு

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோவில் காவலாளி அஜித்குமாா் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின்போது, சாலைக்கு நடுவே இருந்த இரும்பு தடுப்புகள் சேதமடைந்தது. இதையடுத்து அரசின் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக த.வெ.க. தலைவா் விஜய் உள்ளிட்ட போராட்டத்தில் பங்கேற்ற அனைவா் மீதும் வழக்குப் பதிவு செய்து உள்ளனா். புகாரையடுத்து சேதங்களை சீர் செய்து தருவதாக த.வெ.க. சார்பில் சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் கடிதம் தரப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news