தூத்துக்குடியில் உரிய ஆவணங்கள் இன்றி, வந்தே பாரத் ரயிலில் 9 லட்சம் ரூபாயை கொண்டு வந்த பாஜக நிர்வாகியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜகவின் நெல்லை மண்டல பொறுப்பாளராக இருக்கும் நீல முரளி யாதவ் என்பவர், சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலமாக நெல்லைக்கு வந்துள்ளார். அவர் உரிய ஆவணங்கள் இன்றி, பணத்தை எடுத்து செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் அவரை சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் 9 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
