ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த விஜயமங்கலத்தில் வரும் 18ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் பரப்புரை கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்த செங்கோட்டையன் மூலம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் காவல்துறை தரப்பில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக இழுபறியானது.
இந்நிலையில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்புக்கு மாவட்ட எஸ்.பி.அனுமதி வழங்கியுள்ளார்.
