நிஜ திருடர்களைப் பிடிப்பதை விட்டுவிட்டு Pokemon go விளையாட்டில் திருடனைத் துரத்திய போலீஸின் செயல் சமூக ஊடகத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.
தமிழில் 1989 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் போலீஸ் இன்பெக்டராக நடித்திருக்கும் ஜனகராஜ், கார் மெக்கானிக்காக நடித்திருக்கும் கமல்ஹாசனைக் கைதுசெய்யும் விஷயத்தில் சார் நீங்க எங்கேயோ போயிட்டீங்க என்ற சக காவலர்களின் புகழ்ச்சியில் லயித்து, தன்னையே மறந்து கடமையைச் செய்யாமல் இருக்கும்போது, கமல்ஹாசன் தப்பிச்சென்று விடுவார். அதுபோன்ற ஒரு நிஜ சம்பவம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அண்மையில் நடந்துள்ளது.
அங்குள்ள ஒரு கடையில் கொள்ளையர்கள் இருவர் திருடிக்கொண்டிருப்பதாக லாஸ் ஏஞ்சல் காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் வந்தது. அப்போது பணியிலிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் அந்தத் தகவலை அலட்சியப்படுத்திவிட்டு, போக்மேன் கோ விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டிருந்துள்ளனர்.
அந்த விளையாட்டில் திருடர்களைப் பிடிப்பதில் மூழ்கியுள்ளனர். இதனால், நிஜ திருடர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தது விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து தற்போது, நிஜ திருடர்களைத் தப்பிக்கவிட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வேடிக்கையாகவும் விநோதமாகவும் அமைந்துள்ள இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.