Sunday, October 5, 2025

எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.

கடந்த மாதம் 20-ந் தேதி நாமக்கல் மற்றும் பரமத்திவேலூரிலும், 21-ந் தேதி திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையத்திலும் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் நடக்க இருந்தது. ஆனால் மழை காரணமாக அவரின் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு பதிலாக அக்டோபர் 5 மற்றும் 6-ந் தேதிகளில் பிரசாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளில் பரப்புரை செய்ய அனுமதிக்கக் கூடாது என நீதிமன்றம் கூறியிருந்தநிலையில் தற்போது தேர்வு செய்த இடத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்ய இருந்த இடங்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News