Sunday, July 27, 2025

பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என காலை பிடித்து அழுதார்கள் – ராமதாஸ் பேச்சு

பாமகவில் ராமதாசுக்கும் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது : வளர்த்த கடா என் மார்பில் எட்டி உதைத்தது. கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை அன்புமணி செய்துள்ளார். அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன் என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர் அதிமுக – பாமக கூட்டணியே இயற்கையான கூட்டணி. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை அன்புமணி கேட்கவில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் சவுமியா அன்புமணி. பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என சவுமியாவும் அன்புமணியும் ஆளுக்கு ஒரு காலை பிடித்து என்னிடம் அழுதனர்.வேறு வழியின்றி சம்மதித்தேன். அதிமுக-வோடு சேர்ந்திருந்தால் குறைந்தது மூன்று இடமாவது கிடைத்திருக்கும்; அவர்களும் 6-7 இடங்களுக்கு மேலேவே ஜெயித்திருப்பார்கள்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 8 பேர் மட்டுமே கலந்து கொண்டபோதே நான் செத்துப் போய்விட்டேன். எனது தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கூடாது என நிர்வாகிகளை தடுத்துவிட்டார். பாமக செயல் தலைவராக செயல்படுவேன் என்று அன்புமணி பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். செயல் தலைவராக செயல்படுவேன் என்று அன்புமணி கூறினால் அது எல்லா பிரச்சனைக்கு தீர்வாகும் என அவர் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News