Thursday, July 31, 2025

“பாமக முன்பைவிட இப்போது பலமாகி வருகிறது” – தங்கர்பச்சான்

சென்னை தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் தங்கர் பச்சான் கலந்து கொண்டார். இதையடுத்து நிருபர்களிடம் அவர் பேசியதாவது :

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மனகசப்பு என்பது கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கானது. பா.ம.க. மக்கள் இயக்கமாக உருவானது. அனைத்து மக்களுக்கும் போராட கூடிய கட்சி.

பாமக முன்பைவிட இப்போது பலமாகி வருகிறது. பாமக தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. தற்போது நிலவும் சூழல் பாமக வாக்காளர்கள் சிதறமாட்டார்கள். என அவர் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News