Wednesday, April 16, 2025

“திலகபாமா ஒரு நோய்க்கிருமி”..கடுமையாக சாடிய பாமக பொதுச்செயலாளர்

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய விவகாரத்தில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஜனநாயகப் படுகொலை செய்துவிட்டார் என்று பாமக பொருளாளர் திலகபாமா விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் திலகபாமாவை பா.ம.க. பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் கடுமையாகச் சாடியுள்ளார்.

அவர் கூறியதாவது : அரசியல் என்னவென்றே தெரியாத அரைவேக்காடு இவர். பாட்டாளிகளின் உயிரியக்கமான பா.ம.க.வை அழிப்பதற்காக வெளியில் இருந்து கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி.

ராமதாஸை ஜனநாயகப் படுகொலை செய்தவர் என்று நெஞ்சிலே வஞ்சக எண்ணத்தோடு சொற்களை அள்ளி வீசிய திலகபாமாவை வன்மையாகக் கண்டிக்கிறேன். நேற்று முளைத்த காளான்கள் அவரை வசை பாடுவதுதான் பேரவலம்.

நெஞ்சிலே கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இன்றி ராமதாஸை வசை பாடி இருக்கும் திலகபாமா உடனடியாக கட்சியிலிருந்து வெளியேறி விடுவதுதான் அவருக்கு நல்லது என அவர் கூறியுள்ளார்.

Latest news